வவுனியா நீதி மன்றில் தன் கழுத்தை அறுத்த நபர்!

Report Print Thileepan Thileepan in சமூகம்

ஆறு மாதம் சிறைத்தண்டனை வழங்கியமைக்காக தனது கழுத்தை அறுத்த சம்பவம் ஒன்று வவுனியா நீதி மன்றில் இன்று நடைபெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா நீதி மன்றிற்கு வழக்கு நடவடிக்கைகளிற்காக சென்றநபர் ஒருவர் இன்று நீதி மன்றின் நடவடிக்கைக்கு குழப்பத்தை விளைவித்தார் என்ற குற்றசாட்டின் அடிப்படையில் அவருக்கு ஆறுமாதம் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளிக்கபட்டுள்ளது.

இதன்நிமித்தம் பொலிசாரால் அவர் நீதி மன்ற கூண்டுக்குள் அடைக்கபட்டார். இதன்போது தனது பையில் வைத்திருந்த சிறிய பிளேடால் அவரது கழுத்தை அறுத்துள்ளார். காயமடைந்த அவரை மீட்ட பொலிசார் வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

குறித்த சம்பவத்தில் கே.லக்ஸ்மன் வயது 33 என்ற நபரே காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Latest Offers