வவுனியாவில் பற்றியெரியும் வயல்கள்

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் அறுவடை செய்யப்பட்ட வயல்கள் தற்போது எரியூட்டப்பட்டுள்ளதனால் அந்தப் பகுதிகள் பெரும் புகைமூட்டமாகக் காணப்படுகின்றன.

வவுனியா பொது வைத்தியசாலைக்குப் பின்புறமாக உள்ள பூந்தோட்டம் வீதியின் இருபுறமும் உள்ள வயல்கள் கடந்த சில நாள்களாக எரியூட்டப்பட்டு வருகின்றன.

குறித்த வயல்கள் எரியூட்டப்படுவதால் வைத்தியசாலையின் சுற்றுப்புறம், பேருந்து நிலையப் பகுதி, ஏ-9 வீதி என்பன புகைமூட்டமாகக் காட்சியளிக்கின்றன.

தற்போது கடும் வெப்பமான காலநிலை நிலவுகின்றமையினாலும்,குறித்த புகை மூட்டம் காரணமாகவும் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொள்வதாக விசனம் தெரிவித்துள்ளனர்.

Latest Offers