ஊரக எழுச்சி வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்!

Report Print Arivakam in சமூகம்

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் சிபாரிசில் நடைபெற்றுவரும் ஊரக எழுச்சி வேலைத்திட்டம் பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் இன்றைய தினம் பிரதேச செயலக மண்டபத்தில் திட்டமிடல் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இது இரண்டாம் கட்ட வேலைத் திட்டம் எனவும் இம் முறை 200 மில்லியன் ரூபாய் இவ் வேலைத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது எனவும் தவிசாளர் கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இவ் வேலைத் திட்டத்திற்கு அப் பகுதிகளிலுள்ள மக்களும், பொது அமைப்புகளுமே பொறுப்பு காரணம் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பு, தொழில்நுட்ப உத்தியோகத்தரோ மேற்பார்வையிட வராத வேளையிலும் நீங்களே பொறுப்பு ஏனெனில் அது உங்களுக்கான வீதிகள் எனவும் கூறினார் மற்றும் அங்கு வந்த பொது அமைப்பின் பிரதிநிதிகள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.

இக் கலந்துரையாடலில் பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உறுப்பினர் சிவநேசன் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.

Latest Offers