உலக நீர் தின நிகழ்வு

Report Print Mubarak in சமூகம்

உலக நீர் தின நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வினை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இன்று ஏற்பாடு செய்துள்ளதுடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.

இதன்போது உலக நீர் தினத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் சித்திரப் போட்டிகள், திறந்த கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கௌரவிப்பும், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் நீர் வழங்கள் அமைச்சின் உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.

மேலும் குடி நீரின் முக்கியத்துவம் தொடர்பான நாடகங்களும் அரங்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers