முல்லைத்தீவில் இடம்பெற்ற மகளீர் தின நிகழ்வு!

Report Print Yathu in சமூகம்

கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் முல்லைத்திவில் சர்வதேச மகளிர்தின விழா இடம்பெற்றுள்ளது.

இந் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் நிகழ்வு கொண்டாடப்பட்டுள்ளது.

மேலும் மாதரறம் மாண்புற சோராது செயலாற்றும் செவ்வியத்தை பாராட்டி ”மாநிலம் பயனுற வாழ் மகளிர்” எனும் விருதினை பெற்றுக்கொண்ட மாவட்ட செயலாளர் றூபவதி கேதீஸ்வரனை மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இந் நிகழ்வுக்கு மேலதிக மாவட்ட செயலாளர் கோ.தனபாலசுந்தரம் தலைமைவகிக்க கரைதுறைபற்று பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வில் மாவட்ட செயலக பிரதம கணக்காளர் மி.யேசுரெஜிணோல்ட் வாழ்த்துரை வழங்கி கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.