இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மின்சார தடை தொடரும்!

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையில் தொடர்ந்தும் மின்விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மின்சார பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தகவல்கள் கடந்த 18ம் திகதி மின்சக்தி அமைச்சின் செயலாளரினால், உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக முன்னறிவித்தல் எதுவும் இன்றி மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருவதால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

மின்தடை காரணமாக எந்தவித அறிக்கையையும் மின்சார சபை வெளியிடவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எனினும் நாட்டில் சீரான மழை பெய்யும் வரை மின்சார விநியோகம் தடை செய்ய நேரிடலாம் என குறிப்பிடப்படுகின்றது.

Latest Offers