முன்னறிவித்தல் இன்றி மின்சாரத்தை துண்டிப்பது சட்டவிரோதமானது

Report Print Kamel Kamel in சமூகம்

முன்னறிவித்தல் இன்றி மின்சாரத்தை துண்டிப்பது சட்டவிரோதமானது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.

முன்னறிவித்தல் இன்றி மின்சாரம் துண்டிக்கப்படுவதை எதிர்த்து இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சாரசபைக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

கடந்த 18 மற்றும் 19ஆம் திகதிகளில் முன்னறிவித்தல் இன்றி பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதற்காக மின்சாரம் துண்டிக்கப்பட்டது, எவ்வாறு அதனை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மின்சாரத்தை துண்டிக்க வேண்டுமாயின் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

Latest Offers