மட்டக்களப்பில் திரிபீடக நூல் தொடர்பான நிகழ்வு

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பில் திரிபீடக நூல் தேசிய மரபுரிமை நூலாக அறிவிக்கப்பட்டமை தொடர்பான நிகழ்வு நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இன்று காலை மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதில் மட்டக்களப்பு - ஜெயந்திபுரம் பௌத்த மத்திய நிலையத்தின் விகராதிபதி குணானந்த தேரர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தியுள்ளார்.

போதி மாதவன் அருளிய திரிபீடக நூலினை தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்திய தேசிய விழாவுக்கு இணைவாக நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

பௌத்த போதனையின் ஒழுக்கம், அபிதர்மம் மற்றும் சூத்திரம் ஆகியன அடங்கிய பாளி மொழியிலான திரிபீடக நூல் தேசிய மரபுரிமை நூலாக அறிவிக்கப்பட்டு, அதனை சர்வதேச மரபுரிமை நூலாக பிரகடனப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கையினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டு வருகின்றார்.

இதற்கு இணைவாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருவதுடன் அரச நிறுவனங்களிலும் இது தொடர்பான நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Latest Offers