கொழும்பில் கோடீஸ்வர வர்த்தகரை கொடூரமாக கொலை செய்த மனைவி

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பின் புறநகர் பகுதியில் கோடீஸ்வர வர்த்தகரை கொலை செய்த குற்றசாட்டில் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

கொட்டாவை - லியனகொட பிரதேசத்தில் நேற்று மாலை இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை மனைவி மற்றும் வர்த்தகருக்கு இடையில் வாய்த்தகராறு ஒன்று ஏற்பட்டுள்ளது. வாய்த்தகராறு முற்றிய நிலையில் கணவனை மனைவி கத்தியால் குத்தியுள்ளார்.

கொலை சம்பவம் தொடர்பில் மனைவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது கணவன் தன்னை தாக்கியதாகவும், கணவனின் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக கத்தியால் குத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொட்டாவ பிரதேசத்தில் ஆடை வர்த்தகம் மேற்கொள்ளும் 41 வயதான வர்த்தகரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். அவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers