மட்டிக்களி அருள்மிகு திரௌபதாதேவி ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு, மட்டிக்களி அருள்மிகு திரௌபதாதேவி ஆலயத்தின் பங்குனி உத்தர திருச்சடங்கு தீமிதிப்பு உற்சவத்துடன் நிறைவு பெற்றுள்ளது.

ஆலயத்தில் நேற்று மாலை விசேட பூஜைகள் நடைபெற்றுள்ளன.

ஆலயத்தின் திருச்சடங்கு கடந்த 15ஆம் திகதி கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியிருந்தது.

கிராமிய வழிபாட்டு முறைகளை கொண்ட சடங்கு முறையில் ஆலய திருச்சடங்கானது ஏழு தினங்கள் நடைபெற்றுள்ளது.

கடந்த 16ஆம் திகதி மாலை அம்பாளின் வாடை அரைத்தல் திருச்சடங்கு, 17ஆம் திகதி மாலை பண்டாரம் அரைத்தல் சடங்கு, கடந்த 19ஆம் திகதி மாலை அம்பாளின் கல்யாணக்கால் வெட்டும் சடங்கு, 20ஆம் திகதி வனவாசம் நிகழ்வு மற்றும் கன்னிமார் தெரிதலும் நெல்லுக்குற்றல் சடங்கு, 21ஆம் திகதி மாலை அம்பாளின் தவநிலை சடங்கு மற்றும் இரவு விநாயகப்பானை எழுந்தருளல் நிகழ்வு நடைபெற்றுள்ளது.