மசாஜ் நிலையம் என்ற பெயரில் பாலியல் தொழில் விடுதி: இளம் பெண்கள் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

வெலிக்கடை பொலிஸ் பிரிவில் கொட்டா வீதி, அத்துல்கோட்டே, ராஜகிரிய என்ற முகவரியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிய பாலியல் தொழில் நிலையத்தில் தேடுதல் நடத்திய பொலிஸார் அங்கிருந்த சில பெண்களை கைது செய்துள்ளனர்.

வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு நேற்றிரவு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து இந்த தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.

பாலியல் தொழில் நிலையத்தின் முகாமையாளர் எனக் கூறப்படும் பெண்ணொருவரையும் மேலும் 6 பெண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் 25, 28, 29, 32 மற்றும் 48 வயதானவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதுடன் வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers