அவுஸ்திரேலிய நாட்டிலிருந்து திருகோணமலைக்கு வந்துள்ள கப்பல்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை, அஸ்ரப் துறைமுகத்திற்கு அவுஸ்திரேலிய நாட்டிலிருந்து இன்று கப்பலொன்று வந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை இந்து சமுத்திர கடலோர பாதுகாப்பு தொடர்பில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த கப்பல் வந்துள்ளது.

HMS சக்ஸஸ் மற்றும் HMS பரமிடா எனும் கப்பல்கள் திருகொணமலைக்கும், HMS கம்பெரா மற்றும் HMS நியூகாசில் எனும் கப்பல்கள் கொழும்பிலும், ராயல் அவுஸ்திரேலியா யார் போஸ் எனும் விமானம் மத்தளை விமான நிலையத்திற்கும் வந்துள்ளதாகவும் அவுஸ்திரேலியா உயரிஸ்தானிகர் காரியாலயம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை 23ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை இலங்கையில் நிறுத்தப்படும் எனவும் IPE!9 எனும் செயற்திட்டத்தின் கீழ் 1000 முற்படைகள் இலங்கை வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை பாதுகாப்பு படைகள் ஒன்றிணைந்து அனர்த்த முகாமைத்துவம் கடற்பிராந்தியம் சார்ந்த தந்திரோபாய மற்றும் இராணுவ பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும், சர்வதேச சட்டம் மற்றும் தடையற்ற வர்த்தக பாய்ச்சல்கள் ஆகியவற்றிற்கு இது உறுதியளிக்கும் வகையில் செயற்படுவதற்காகவே இக்கப்பல் பயிற்சி அமையும் என அவுஸ்திரேலிய பதில் தூதூவர் ஜான் பிலிப் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கை விஜயத்தை தொடர்ந்து இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்னாம் போன்ற நாடுகளுக்கு இக்கப்பல்கள் செல்லவுள்ளதாகவும் அவுஸ்திரேலியா உயரிஸ்தானிகர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

Latest Offers