சட்டவிரோத வலைகளை அகற்றும் நடவடிக்கை தீவிரம்

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு, நந்திக்கடல் பகுதியில் சட்டவிரோத வலைகளை அகற்றும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கை முல்லைத்தீவு நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளின் தலைமையில் இன்று பகல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு வட்டுவாகல் கடற்தொழில் சங்கம் முழு ஆதரவை வழங்கியுள்ளது.

மேலும் தடைசெய்யப்பட்ட கூட்டுவலைகளை பயன்படுத்தி பெறுமதியான இறால் உள்ளிட்ட கடலுணவுகள் சூரையாடப்படுவதாக அந்தப்பகுதியில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளும் மீனவர்களினால் தொடர்ச்சியாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று அதிரடியாக இந்த நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Latest Offers