தாபரிப்பு பணம் செலுத்தாது தலைமறைவாக இருந்த நபர் விளக்கமறியலில்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை சீனக்குடா பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு தாபரிப்பு பணம் செலுத்தாது தலைமறைவாக இருந்த நபரை இம் மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று உத்தரவிட்டார்.

கொட்போ, சீனக்குடா பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் இரண்டு பிள்ளைகளுக்கு மாதாந்தம் எட்டாயிரம் ரூபா செலுத்தி வந்த நிலையில் மூன்று மாதங்களாக 24000 ரூபாவை செலுத்தாது தலைமறைவாக இருந்த நிலையிலே மனைவி செய்த முறைப்பாட்டுக்கமைய கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் வாசஸ்தலம் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Latest Offers