யாழ்ப்பாணத்தில் மரண வீட்டில் நடந்த பயங்கரம்

Report Print Vethu Vethu in சமூகம்

யாழ்ப்பாணத்தில் மரண சடங்கு நடந்த வீட்டில் ஆயுதங்களுடன் சென்ற நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் யாழ்ப்பாணம் அளவெட்டிப் பகுதியில் நேற்று நடந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்த நபரின் மரண சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக கொண்டிருந்தன.

இதன் போது வாள்களுடன் நுழைந்த கும்பல் ஒன்று, அங்கிருந்தவர்களை வாளால் வெட்டி அச்சுறுத்தி நகை மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

அல்லைப்பிட்டியில் நேற்று நடந்த விபத்தில் உயிரிழந்த இளைஞனின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெற்றது.

இறந்தவரின் சடலம் வீட்டுக்கு வந்து சேர்வதற்கு முன்னர் இந்தச் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers