சர்ச்சையை ஏற்படுத்திய 700 கோடி ரூபா பெறுமதியான இரத்தினக் கல்லின் மெய்யான உரிமையாளர் தென் ஆபிரிக்கர்

Report Print Kamel Kamel in சமூகம்

700 கோடி ரூபா பெறுமதியான இரத்தினக் கல்லின் மெய்யான உரிமையாளர் தென் ஆபிரிக்கப் பிரஜை என தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய 700 கோடி ரூபா இரத்தினக் கல் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்ற நிலையில், குறித்த இரத்தினக் கல் தென் ஆபிரிக்க பிரஜைக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுகிறது.

இந்த இரத்தினக் கல் தென் ஆபிரிக்கப் பிரஜை ஒருவரினால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த இரத்தினக் கல் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் விமான நிலையத்தில் வைத்து சுங்கத் திணைக்கள அதிகாரியொருவர் இரத்தினக் கல்லை மீட்டுள்ளார்.

இதன் போது கையூட்டல் தருவதாகத் தெரிவித்து இரத்தினக் கல்லை எடுத்துச் செல்ல அனுமதிக்குமாறு குறித்த தென் ஆபிரிக்கப் பிரஜை சுங்க அதிகாரியிடம் கோரியுள்ளார்.

இதற்கு இணங்கிய சுங்க அதிகாரி இரத்தினக் கல்லை, சட்டவிரோதமாக மீட்கப்பட்ட ஆவணப்பட்டியலில் இணைக்காது இரகசியமாக எடுத்துச் சென்று தன் வசம் வைத்துக் கொண்டுள்ளார்.

எனினும், உரிய நேரத்தில் தமக்கு கையூட்டல் வழங்கத் தவறிய காரணத்தினால் சுங்க அதிகாரி அரவ்வல பகுதியைச் சேர்ந்த இரத்தினக் கல் வியாபாரி ஒருவரிடம் இந்த இரத்தினக் கல்லை ஒப்படைத்துள்ளார்.

தமது இரத்தினக் கல் அபகரிக்கப்பட்டமை குறித்து தென் ஆபிரிக்கர் இலங்கை முகவர் ஒருவரின் ஊடாக டுபாயில் நிலைகொண்டிருந்த மாகந்துர மதுஸிற்கு அறிவித்துள்ளார். இதன் அடிப்படையிலேயே அரவ்வல பிரதேசத்தைச் சேர்ந்த கிரிசான் பீரிஸிடமிருந்து இரத்தினக் கல் கொள்ளையிடப்பட்டுள்ளது.

சவூதியில் தாம் கடமையாற்றிய காலத்தில் செல்வந்தர் ஒருவரின் வீட்டின் மண்மேடு ஓன்றிலிருந்து இரத்தினக் கல் கிடைக்கப் பெற்றதாகவும் அதனை தமது பொருட்களுடன் இலங்கைக்கு அனுப்பி வைத்ததாகவும் கிரிஸான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Latest Offers