லண்டன் தமிழர் தகவல் மையத்தின் வரதகுமாருக்கு தமிழர் மனித உரிமைகள் மையம் அஞ்சலி

Report Print Dias Dias in சமூகம்

கடந்த 13ஆம் திகதி லண்டனில் திடீர் மரணம் ஏய்திய பிரித்தானிய தமிழர் தகவல் மையத்தின் இயக்குனரும் ஸ்தாபகரில் ஒருவருமான வைரமுத்து வரதகுமாருக்கு தமிழர் மனிதர் உரிமைகள் மையம் தமது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.

இவ் இரங்கல் செய்தியில் தமிழர் மனிதர் உரிமைகள் மையமும், தமிழர் தகவல் மையமும் சில வேலை திட்டங்களில் இணைந்து செயற்பட்டதாகவும், தமிழீழ மக்களின் தற்போதைய சிக்கலான நிலையில் வரதகுமாரின் இழப்பு நிட்சயம் ஓர் இடைவெளியை உருவாக்குமென அறிக்கை கூறுகின்றது.

தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தினராகிய தமக்கு ஐ.நா.மனித உரிமை ஆணையாளராகிய அல் குசேயின் அவர்களை சந்திப்பதற்கு ஓர் வாய்ப்பு கிடைத்துள்ள வேளையில், தாம் திரு வரதகுமார் உட்பட சர்வதேசத்தில் மிகவும் பிரபல்யமான வேறு சிலரையும் தமது சந்திப்பில் இணைத்துக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரதகுமார் சுதந்திரமாக வேலை செய்த அதேவேளை, சகல புலம்பெயர்வாழ் அமைப்புகள் குழுக்கள் ஆகியவற்றுடன் மிகவும் நெருங்கிய உறவை கொண்டுள்ளதாகவும், இதேவேளை, நாட்டிலும் பல விதப்பட்ட அமைப்புகளுடன் மிகவும் நட்பை பேணியுள்ளதாக தமிழர் மனித உரிமைகள் மையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Offers