8 மாத குழந்தைக்காக 9 தாய்மாரின் நெகிழ்ச்சியான சம்பவம்! வியந்து போன பொலிஸார்

Report Print Vethu Vethu in சமூகம்

ஹட்டனில் பல மணித்தியாலங்கள் பசியால் வாடிய குழந்தையின் பசியை போக்க 9 தாய்மார் முன்வைத்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நல்லதண்ணி பிரதேசத்தில் 10 மணித்தியாலங்களுக்கு அதிக நேரம் பசியோடு இருந்த 8 மாத குழந்தைக்கு 9 தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்க முன்வந்துள்ளனர்.

சிவனொளிபாதமலை யாத்திரைக்காக வந்த பெண் ஒருவர் தனது குழந்தைக்கு குளிரும் என்பதால், யாத்தரையை முடித்து விட்டு வரும் வரை குழந்தையை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு இன்னொரு பெண்ணிடம் கொடுத்து விட்டு சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் சென்ற தாய் நேற்று காலை வரை வரவில்லை. தாய் பால் மாத்திரம் அருந்தும் குழந்தை பசியில் அழ ஆரம்பித்துள்ளது. செய்வதறியாத பெண் சம்பவம் தொடர்பில் நல்லதண்ணி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

உடனடியாக செயற்பட்ட பொலிஸார் ஒலிபெருக்கி ஊடாக தாயை அவ்விடத்திற்கு வருமாறு அவசர அறிவிப்பு விடுத்துள்ளார்.

அந்த செய்தி வழங்கப்பட்ட பின்னரும் தாய் அவ்விடத்திற்கு வரவில்லை என்பதனால் தாய்ப்பால் வழங்க கூடிய 9 தாய்மார்கள் நல்லதண்ணி பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

குறித்த தாய்மார்களின் பாசத்தை கண்டுவியந்து போன பொலிஸ் அதிகாரிகள், ஒரு பெண்ணிடம் குழந்தையை வழங்கி தாய்ப்பால் வழங்குமாறு குறிப்பிட்டுள்ளார்.

காலை 8.30 மணியளவில் அவ்விடத்திற்கு வந்த தாய் கூட்ட நெரிசல் காரணமாக பிழையான வீதியில் பயணித்து விட்டதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

Latest Offers