இன்று வெளியிடப்பட உள்ளது இலங்கை மக்களுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு

Report Print Sujitha Sri in சமூகம்

இலங்கை மக்களுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை இலங்கை மின்சாரசபை இன்றைய தினம் வெளியிட உள்ளதாக தெரியவருகிறது.

இலங்கை மின்சார சபையினால் மின்சார விநியோகத்தடை தொடர்பில் வெளியிடப்பட்டதாக கூறப்படும் உத்தியோகபூர்வ அட்டவணை பொய்யானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு எந்தவொரு உத்தியோகபூர்வ அட்டவணையும் வெளியிடப்படவில்லை என்று இலங்கை மின்சார சபையின் தலைவர் ரக்கித ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாள் ஒன்றுக்கு நான்கு மணித்தியாலங்கள் மின் விநியோக தடையை அமுல்படுத்துவது தொடர்பிலான அறிவிப்பே வெளியிடப்படவுள்ளது.

காலை 8.30 முதல் முற்பகல் 11.30 வரையும், முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 2.30 வரையும், பிற்பகல் 2.30 முதல் மாலை 5.30 வரையும் மின் விநியோக தடையை மேற்கொள்ள யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அதேபோல் மாலை வேளையில் 6 மணியிலிருந்து 10 மணிவரையான நேரத்தில் ஏதாவதொரு மணித்தியாலம் மின் விநியோகம் தடைப்படலாம்.

அதேபோல், சனிக்கிழமை காலை 8.30 முதல் முற்பகல் 10.45 வரையும், முற்பகல் 10.45 முதல் பிற்பகல் ஒரு மணிவரையும், ஒரு மணி முதல் பிற்பகல் 3.15 வரையும், பிற்பகல் 3.15 முதல் மாலை 5.30 வரையும் மின்சார விநியோகத் தடை அமுல்படுத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார விநியோக தடை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டில் மின்சாரத்திற்கான கேள்வி அதிகரித்துள்ளமையினால் நாளொன்றுக்கு நான்கு மணிநேர மின்சார விநியோக தடையை அமுல்படுத்த நேரிடும் என மின்சார பொறியிலாளர் சங்கம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers