கஞ்சா வியாபாரிக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை, கந்தளாயில் கஞ்சா வியாபாரியொருவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் குறித்த சந்தேகநபரை இன்று ஆஜர்படுத்திய போதே இம்மாதம் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வென்ராசன்புர பகுதியை சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கந்தளாய் பகுதியில் சந்தேகநபர் நீண்ட நாட்களாக மறைமுகமாக கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார்.

இது தொடர்பில் கந்தளாய் தலைமையக போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் அரை கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Latest Offers