தமிழகத்தில் இருந்து நாடு திரும்பவுள்ள ஈழ அகதிகள்

Report Print Jeslin Jeslin in சமூகம்

தமிழ்நாட்டில் இருந்து, நாளையும் எதிர்வரும் 28ஆம் திகதி 24 ஈழ அகதிக் குடும்பங்கள் நாடு திரும்பவுள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகரகத்தின் உதவியுடன் அவர்கள் நாடு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விசேட விமான சேவைகளின் ஊடாக குறித்த இரண்டு தினங்களிலும், 24 குடும்பங்களைச் சேர்ந்த 54 பேர் நாடு திரும்புவதாக, தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார, மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்றத்துறை வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நாடு திரும்புகின்றவர்கள் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆகும்.

அவர்களை அவர்களது மாவட்டங்களிலேயே குடியேற்ற நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் வீ.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

Latest Offers