பழைவாய்ந்த தமிழர் பகுதியை தொல்பொருள் திணைக்களம் அபகரிக்க திட்டம்

Report Print Mohan Mohan in சமூகம்

40 வருடங்கள் பழைமை வாய்ந்த நாயாறு இடுகாட்டு வளாகத்தை தொல்பொருள் திணைக்களத்தினர் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு - செம்மலை கிழக்கு, யூதாகோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட குறித்த இடுகாட்டில் பல வருடங்களுக்கு முன் 20 இற்கும் மேற்பட்ட பொதுமக்களின் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், யாழ். மாதகல் பகுதியை சொந்த இடமாகவும் செம்மலை கிழக்கு நாயற்று பகுதியை வதிவிடமாகவும் கொண்டு வாழ்ந்து இறந்த செபஸ்ரியம்பிகை என்பரின் கல்லறை தற்பொழுது வரை அவ்விடத்தில் காணப்படுகின்றது.

குறித்த செபஸ்ரியம்பிகை என்பவரது சடலம் 1981ஆம் ஆண்டு அவ்விடத்தில் அடக்கம் செய்யப்பட்டதாக கல்லறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இறுதியுத்தத்தின் பின்னர் நாயாறு யூதாகோயில் உள்ளிட்ட வளாகத்தை கைப்பற்றிய இலங்கை கடற்படையினார் அவ்விடத்தில் பாரிய முகாம் ஒன்றை அமைத்து தற்பொழுது வரை நிலை கொண்டுள்ளனர்.

இதனால் யூதாகோயிலில் வழிபாடு எதுவும் நடைபெறாத நிலையில் கோயில் நிர்வாகம் இயங்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் மீண்டும் குறித்த பகுதியை தொல்பொருள் திணைக்களம் அபகரிக்க திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Offers