கந்தளாயில் அடையாளந்தெரியாதோரால் கடையுடைப்பு

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலையில் உள்ள தேனீர் கடையொன்று அடையாளந்தெரியாதோரினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை - கந்தளாய், பேராற்றுவெளி கிராமத்தின் வீதியோரத்தில் அமைந்துள்ள தேனீர் கடையே இன்று அதிகாலை அடையாளந்தெரியாதவர்களால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

சுமார் மூன்று வருடங்களுக்கு மேலாக பேராற்றுவெளி பகுதியில் இக்கடை காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers