மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தொடர்பில் ஹிருனிகா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

Report Print Kamel Kamel in சமூகம்

இலங்கையில் மிக மோசமான ஊழல் மோசடிகள் இடம்பெறும் இடமாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் காணப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் இடம்பெற்று வரும் ஊழல் மோசடிகள் தொடர்பில் உடனடியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வரவு செலவுத் திட்டம் தொடர்பிலான குழு நிலை விவாதத்தில் இன்று பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிட்டதன் மூலம் மோட்டார் போக்குவரத்து திணைக்கள பிரதானி பாரியளவில் ஊழல் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

அச்சிடப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்றுக்காக 1700 ரூபா அறவீடு செய்யப்படுவதாகவும் இதில் 360 ரூபாவே அரசாங்கத்திற்கு கிடைக்கப் பெறுகின்து எனவும் மிகுதி சுமார் 1300 ரூபா தென் ஆபிரிக்க நிறுவனமொன்றுக்கு செல்வதாகத் தெரிவித்துள்ளார்.

சாரதி அனுமதிப் பத்திரத்தை அச்சிடும் பொறுப்பு தென் ஆபிரிக்க நிறுவனமொன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.