மட்டக்களப்பில் விளையாட்டுத் துறை அபிவிருத்திக்காக 8 கோடி ரூபா ஒதுக்கீடு

Report Print Kumar in சமூகம்

கம்பிரலிய திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் விளையாட்டுத்துறை அபிவிருத்திக்காக எட்டு கோடிரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட ஆண் கட்டழகர்களுக்கிடையிலான போட்டி மாலை மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பின் சிறந்த ஆண் கட்டழகரை தெரிவு செய்யும் வகையில் நடைபெற்ற போட்டியில் பெருமளவான ஆண் கட்டழகர்கள் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் மட்டக்களப்பின் சிறந்த ஆண் கட்டழகனாக மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவினை உள்ளடக்கிய வை.டியோன் தெரிவு செய்யப்பட்டார்.

55,65,75 கிலோ நிறையுடைய ஆண் கட்டழகர்கள் மத்தியில் நடாத்தப்பட்ட இந்த போட்டியில் இரண்டாம் இடத்தினை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவினை சேர்ந்த எம்.ஜி.அஸ்மீர் தெரிவு செய்யப்பட்டதுடன் மூன்றாம் இடத்தினை மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவினை சேர்ந்த கி.ஜிஜானந் பெற்றுக்கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுத்திணைக்களத்தின் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்பரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான ஞா.சிறிநேசன் கலந்து கொண்டார்.

சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட கட்டழகர் சங்க தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளருமான பிரசன்னா இந்திரகுமார்,மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் து.மதன்,ரொனியான் உட்பட பலர் கலந்துகொண்டனர்.இதன்போது வெற்றிபெற்றவர்களுக்கு வெற்றிக்கேடயங்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers