தமிழர் ஆசிரியர் சங்கத்தின் ஆட்சி மன்றக் கூட்டம்

Report Print Sumi in சமூகம்

மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக்கும் நடவடிக்கைக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் ஆட்சி மன்றக் கூட்டம் சங்கத்தின் தலைவர் க.நல்லதம்பி தலைமையில் நேற்று யாழில் நடைபெற்றுள்ளது.

இதன்போது நாட்டின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் வருகை தந்த சங்கத்தின் தாயச்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

குறித்த கூட்டத்தில் சங்கத்தால் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழ் ஆசிரியர் சங்க செயலாளர் சரா புவனேஸ்வரன் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.