கொழும்பு மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

கொழும்பின் சில பகுதிகளில் இன்று இரவு 9 மணி தொடக்கம் 9 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும், கொழும்பு 13, 14 மற்றும் 15 போன்ற இடங்களிலேயே குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்தியாவசிய திருத்த பணி காரணமாகவே இந்த நீர்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது. கொழும்பு - கோட்டை மற்றும் புறக்கோட்டை போன்ற பிரதேசங்களில் இந்த காலப்பகுதியில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers