கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம்!

Report Print Vethu Vethu in சமூகம்

வெளிநாட்டில் உயிரிழந்த நிலையில் இலங்கைக்கு கொண்டு வரும் சடலங்களால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்ப நிலை ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் சடலங்களை 24 மணித்தியாலத்திற்குள் உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

எனினும் சில மாதங்களாக பகலில் மாத்திரம் சடலங்களை கையளிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விமான நிலைய சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் ஆரம்பத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் சடலங்கள் 24 மணித்தியாலங்களில் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

எனினும் சில மாதங்களால் சுகாதார சேவை இயக்குனர் ஜெனராலினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைய அந்த கடமை 12 மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

இதனால் காலை 8 மணியில் இருந்து இரவு 8 மணி வரை சடலங்கள் விடுக்கப்பட்டது. எனினும் அந்த சடலங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு அதனை உறவினர் வெளியே கொண்டு செல்வதற்கு அதிகாலை ஆகிவிடுகிறது.

சிலர் தூர பிரதேசங்களில் இருந்து வந்தால் சடலங்களை பெறுவதற்கு அதிகாலை முழுவதும் விமான நிலையத்தில் காத்திருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

எனினும் விமான நிலைய வைத்தியர்கள் இதுவே இலகுவாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். எனினும் சடலத்தை பெறுவதற்கு வரும் உறவினர்கள் பாரிய சிரமங்களுக்கு முகம் கொடுப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

Latest Offers