வவுனியா, புதுக்குளம் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கி வைப்பு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா, புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வு பாடசாலை அதிபர் எஸ்.கமலாம்பிகை தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.

பாடசாலையின் 160 ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு பாடசாலை சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதில் பிரதம அதிதிகளாக வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் றொசான் பெனாண்டோ, வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.கணேசநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கி வைத்துள்ளனர்.

மேலும், வவுனியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி மகிந்த வில்வ ஆராட்சி, ஓமந்தை போட்டக்கல்வி அதிகாரி எஸ்.சசிகுமார் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.