ஜப்பான் மாணவர்களினால் மாத்தறையில் நற்பணி முன்னெடுப்பு

Report Print Steephen Steephen in சமூகம்

மாத்தறை, மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுக பகுதியில் ஜப்பான் நாட்டில் இருந்து இலங்கை வந்துள்ள 20 மாணவர்கள் இன்று சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மாணவர்களுடன் கரையோர பாதுகாப்பு படையினர், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், மீனவர்களும் இணைந்து சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து கருத்து வெளியிட்ட, மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுக முகாமையாளர் பீ.எம்.ஏ. நிரோஷன்,

மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்தை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் இன்றைய நாள் முழுவதும் இடம்பெறும். மிரிஸ்ஸ கடற்கரை பகுதியை பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

இலங்கைக்கு கல்வி பயணமாக வந்துள்ள ஜப்பானை சேர்ந்த 20 மாணவ, மாணவிகள் எங்களுடன் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் மாத்தறைக்கு வந்து இலங்கை கலாச்சாரம் தொடர்பான கற்றலில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீன்பிடி துறைமுகம் மற்றும் கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் மற்றும் குப்பைகள் இருப்பதை கண்டு எங்களுடன் இணைந்து அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் இந்த ஜப்பான் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வெளிநாட்டவர்கள் வந்து இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால், எமது மீனவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அங்காங்கே குப்பைகளை போடுவதை நிறுத்துவார்கள் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers