யுத்தத்தில் அழிக்கப்பட்ட கிறிஸ்தவ ஆலயங்களை கண்டுக்கொள்ளாத அரசாங்கம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

மூன்று தசாப்த கால யுத்தத்தில் அழிக்கப்பட்ட கிறிஸ்தவ ஆலயங்களை புனரமைத்து தருமாறு பல அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

இந்த விடயம் தொடர்பில் கேள்வி குறியாகவே காணப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

வரவு செலவு திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தில் இந்து கலாச்சார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட செயற்திட்டங்களில் 10 சதவீதம் கூட கிறிஸ்தவ அமைச்சு முன்னெடுக்கவில்லை.

அழகான கடற்கரைகளைக் கொண்ட கிழக்கு மாகாணத்தின் வீதிகள் ,உட்கட்டமைப்பு வசதிகள் இதுவரை புனரமைக்கப்படாமல் காணப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் வேலை வாய்ப்பின்றி வாழும் இளைஞர், யுவதிகளுக்கு சுற்றுலாத்துறை மூலம் 60 வீதமான வேலை வாய்ப்பினை பெற்று தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers