ஆசியாவில் சிறந்த ஹோட்டல்களின் பட்டியல்! சங்கக்கார - மஹேலவின் ஹோட்டலும் இணைவு

Report Print Vethu Vethu in சமூகம்

ஆசியாவின் சிறந்த 50 ஹோட்டல்களில் இலங்கை ஹோட்டல் ஒன்றும் இடம்பிடித்துள்ளது.

இந்தப் பட்டியலில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தனவுக்கு சொந்தமான ஹோட்டலும் இணைந்துள்ளது.

Ministry Of Crab என்ற ஹோட்டலே இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இந்த ஹோட்டல் ஆசியாவில் சிறந்த ஹோட்டல்களில் 35வது இடத்தை பிடித்துள்ளது.

பிரபல சமையல் கலைஞர் தர்ஷன முனிதாஸவின் கண்கானிப்பின் கீழ்ந்த இந்த ஹோட்டல் நடத்தி செல்லப்படுகின்றது.

கொழும்பில் ஆரம்பிக்கப்பட்ட இந்த உணவகத்தின் கிளைகள் தற்போது சீனா, பிலிபைன்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.