விமானப்படையின் உடையுடன் சென்ற சிறுவன்! தையல் நிலைய உரிமையாளருக்கு எச்சரிக்கை

Report Print Theesan in சமூகம்

வவுனியா நகரப்பகுதியில் விமானப்படையினரின் சீருடையுடன் சென்ற சிறுவனினால் தையல் நிலையத்தின் உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரப்பகுதியில் நேற்றைய தினம் சிறுவனொருவர் விமானப்படையினரின் சீருடையுடன் நின்றுள்ளார்.

இதனை அவதானித்த பொலிஸார் குறித்த சிறுவனை அழைத்து சீருடை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது நெளுக்குளத்தில் அமைந்துள்ள தையல் நிலையத்தில் சீருடையை கொள்வனவு செய்ததாக சிறுவன் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் சம்பந்தப்பட்ட தையல் நிலையத்திற்கு நேற்று மதியம் 3 மணியளவில் சென்ற வவுனியா பொலிஸார் தையல் நிலைய உரிமையாளரை விசாரணைக்காக வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அத்துடன் இவ்வாறான சீருடைகளை விற்பனை செய்ய வேண்டாமென தையல் நிலைய உரிமையாளர்களுக்கு பொலிஸாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.