ஏப்ரல் பத்தாம் திகதியளவில் நிரந்தர முடிவு அறிவிக்கப்படும்

Report Print Ajith Ajith in சமூகம்

நாட்டில் நாளாந்தம் மேற்கொள்ளப்பட்டு வரும் மின்சார விநியோக தடைக்கு ஏப்ரல் பத்தாம் திகதியளவில் நிரந்தர முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்து குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 2014ஆம் ஆண்டில் இருந்து மின்சாரத்துக்கான தேவையில் குறைப்பாடு உள்ளது.

நாட்டின் மின்சார தேவை 8 வீதம் வரை அதிகரித்துள்ளது. எனினும் அதனை பூர்த்தி செய்ய போதுமான விநியோகம் இல்லை என கூறியுள்ளார்.