தோட்டத் தொழிலாளர்களுக்கு மேலதிகமாக 50 ரூபா

Report Print Ajith Ajith in சமூகம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு மேலதிகமாக 50 ரூபா கொடுப்பனவுகளை வழங்குவதற்காக 1, 200 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

நேற்று கூடிய அமைச்சரவையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த 50 ரூபா கொடுப்பனவு தொழிலாளர்களுக்கான சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படவுள்ளது.

ஏற்கனவே தாம் கோரிய 1,000 ரூபா சம்பளம் கிடைக்கவில்லை என்று குற்றம் சுமத்தி தொழிலாளர்கள் நடத்திவரும் போராட்டத்தின் வேகம் இன்னும் ஓயவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.