சேருநுவர பிரதேசத்தில் ஐந்து பசு மாடுகளை திருடிய மூவர் கைது

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பிரதேசத்தில் ஐந்து பசு மாடுகளை திருடிய மூவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்

கல்லாறு, தோப்பூர் பகுதியை சேர்ந்த 23, 25 மற்றும் 26 வயதுடைய மூவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்கள் நீண்ட காலமாக இப்பிரதேசத்தில் மாடுகளை திருடி வருவதாகவும், அனுமதியின்றி அதன் இறைச்சியை விற்பனை செய்து வருவதாகவும் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே தலைமறைவாகியிருந்த சந்தேகநபர்கள் மூவரும் கைதாகியுள்ளனர்.

சந்தேகநபர்களை தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.