மலையகத்தில் நீரில் மாயமான கோயில்கள் மீண்டும் காட்சி கொடுத்தன!

Report Print Vethu Vethu in சமூகம்

மலையகத்தில் நீரில் மூழ்கிப் போயிருந்த கோவில்கள் தற்போது வெளியில் தென்படத் ஆரம்பித்துள்ளது.

தற்போது நிலவும் கடும் வரட்சி காரணமாக காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் மேலும் குறைவடைய ஆரம்பித்துள்ளதாக பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை வரையில் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 50 அடி அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போதை நிலையில் நீர்த்தேக்கத்திலுள்ள நீரில் 9 அடி நீர் மாத்திரம் மின்சார உற்பத்திக்கு பயன்படுத்த முடிவதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் பொதுவான அளவில் இருந்து 63 அடி வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வீழ்ச்சியடைந்தமையினால் நீர்த்தேக்கத்தில் மூழ்கிய பல தீவுகள் இதுவரையில் தோன்ற ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நிர்மாணிப்பின் போது மூழ்கிய ஆலயம் தற்போது காட்சியளிக்க ஆரம்பித்துள்ளது. அந்த கோவிலில் உள்ள சிலைகளில் நீர் கோரி மக்கள் தினமும் வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த ஆலயம் 1917ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மிகவும் அலங்காரமிக்க இந்த கோயில் முழுவதுமாக கருங்கல்லிலேயே நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

100 வருடங்கள் பழமையான இந்த கோயில் இன்னமும் பாதுகாப்பாகவே உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.