வடக்கு ஆளுநரினால் முதியோர் இல்ல சிற்றூழியர்களிற்கான நியமனங்கள் வழங்கி வைப்பு

Report Print Suman Suman in சமூகம்

யாழ். கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாணத்தின் அரச முதியோர் இல்ல சிற்றூழியர்களிற்கான நியமன கடிதங்கள் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவனால் வழங்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சியில் இன்று வடமாகாண ஆளுநரின் தலைமையில் மக்கள் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போதே குறித்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதோடு, பல பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களின் பிரச்சினைகளை ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

குறித்த பதவி நிலைக்காக 14 பேர் அழைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று வருகை தந்திருந்த 9 பேருக்கே நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.