மறைமுக தொடர்புடைய பெண்ணின் கணவரை கொலை செய்துள்ள இராணுவ கோப்ரல்

Report Print Steephen Steephen in சமூகம்

மாத்தளை - வில்கமுவ, குருவலயாய பிரதேசத்தில் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக இராணுவ கோப்ரல் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

42 வயதான இந்த இராணுவ கோப்ரல் கதிர்காமம் பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமில் சேவையாற்றி வந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபர் மறைமுகமாக தொடர்பு வைத்திருந்த பெண்ணொருவரின் கணவனையே நேற்று இவ்வாறு கொலை செய்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக மூன்று பிள்ளைகளின் தாயான அந்த பெண்ணையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.