மது அருந்துவதற்காக பிறந்து ஐந்தே நாட்களான குழந்தைக்கு தந்தை செய்த கொடூரம்

Report Print Jeslin Jeslin in சமூகம்

திக்வெல்ல பகுதியில், பிறந்து ஐந்து நாட்களான தனது குழந்தையை விற்ற தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மது அருந்துவதற்கு பணம் இல்லாததன் காரணத்தினால் குறித்த நபர் தனது குழந்தையை விற்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

குழந்தையை தாயிடம் இருந்து பிரித்துச் சென்று மற்றுமொரு பெண்ணிடம் ஆயிரம் ரூபாவிற்கு குறித்த நபர் விற்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், குறித்த நபரை மாத்தறை நீதவான் நிதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது அவருக்கு ஐயாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு இரண்டு லட்சம் ரூபா அபராதம் செலுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் இம்மாதம் 30ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.