சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட ஐவர் கைது

Report Print Mohan Mohan in சமூகம்

சட்டவிரோத மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஐவரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர்.

திருகோணமலை, கிண்ணியா கடற்பரப்பை அண்டிய பகுதியில் வைத்தே கடற்படையினர் இவர்களை கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 20, 31, 33 மற்றும் 30 வயதுடையவர்கள் எனவும் அவர்களிடமிருந்து 225 மீற்றர் நீளம் கொண்ட இரு வலைகளையும், படகு இயந்திரம் ஒன்றும் 1,291 கிலோ நிறையுடைய மீன்களையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் இவ்வாறு கைதாகிய சந்தேக நபர்களைகளையும் தடயப்பொருட்களும் திருகோணமலை மீன்பிடி உதவி பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளதாக இன்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.