கொழும்பிலிருந்து சென்ற ரயிலில் சற்று முன்னர் விபத்து - ஒருவர் பலி - 3 பேர் ஆபத்தான நிலையில்

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பில் இருந்து சென்ற ரயிலுடன் மோட்டார் வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் மூன்று பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹிக்கடுவை பொலிஸ் பிரிவின் தொடன்நுவர பிரதேசத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று மாலை 7 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் மோட்டார் வாகனத்தில் பயணித்த 4 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலிலேயே விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.