நாடுகடத்தப்பட்ட நிலையில் லலித் குமார கைது!

Report Print Murali Murali in சமூகம்

டுபாயில் இருந்து நாடுகடத்தப்பட்ட முன்னாள் சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர் லலித் குமார, கொழும்பு குற்றவியல் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் தெரிவித்துள்ளார்.

“டுபாயில் கைது செய்யப்பட்ட அமல் பெரேராவின் புதல்வர் நதிமால் பெரேரா மற்றும் முன்னாள் சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர் லலித் குமார ஆகியோர் இன்று நாடுகடத்தப்பட்டனர்.

இலங்கை வந்த இவர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் பொறுப்பேற்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பினனர் நதிமால் பெரேரா விடுவிக்கப்பட்டிருந்தார்.

எனினும், லலித் குமார மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றவியல் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்” என பொலிஸ் ஊடகபேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.