சினிமாவின் வரலாற்று தடத்தில் முதலாவது ஈழத்தமிழ் பெருந்திரைப் படைப்பு

Report Print Dias Dias in சமூகம்

ஈழத்தமிழ் சினிமாவின் வரலாற்று தடத்தில் ஐ.பி.சி தமிழ் ஊடக வலையமைப்பின் முதலாவது பெருந்திரைப் படைப்பான FRIDAY AND FRIDAY திரைப்படத்தின் குறு முன்னோட்டம் (teaser) வெளியாகியுள்ளது.

தமிழ், பிரென்சு ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தினை ஈழத் தமிழரான சதா பிரணவன் இயக்கியுள்ளார்.

தீபன் பிரென்சுத் திரைப்படம் உட்பட பல வெளிநாட்டு படைப்புக்களில் நடித்து வரும் சோபாக சக்தி இப்படத்தில் பிரதான பாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.

36 வினாடிகளைக் கொண்டதாக அமைந்துள்ள இக்குறு முன்னோட்டத்தில், காவல்துறையிடம் தான் சிரிய பயங்கரவாதி என பிரதான பாத்திரம் சொல்ல முன்னோட்டம் முடிகின்றது.

பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை போன்ற திரைப்படங்களை இயக்கிய தமிழக இயக்குனர் வெற்றிமாறன் இப்படத்தின் டீசரை லண்டனில் வெளியிட்டுள்ளார்.

மேலும் விரைவில் இத்திரைப்படம் உலகெங்கும் வெளி வர இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.