தூக்கிட்டு இளம் தாய் மற்றும் மகன் தற்கொலை! பொலிஸார் தீவிர விசாரணை

Report Print Murali Murali in சமூகம்

தூக்கில் தொங்கிய நிலையில் இளம் தாய் மற்றும் மகனின் சடலங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலாங்கொட, மஹவலதென பகுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட இருவரது சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

26 வயதுடைய பெண் ஒருவரது சடலமும் 5 வயதுடைய குறித்த பெண்ணின் மகனின் சடலமுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து பொலிஸார் தீவர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தற்கொலை செய்துக்கொண்ட பெண்ணின் கணவன் அரசத்துறையில் தொழில் புரிந்து வருகிறார். சம்பவம் நடந்த போது அவர் வீட்டில் இருக்கவில்லை எனவும் தாயாருடன் தற்கொலை செய்துக்கொண்டுள்ள 5 வயது மகன் முன்பள்ளி மாணவன் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

எவ்வாறாயினும் தாயும் மகனும் தற்கொலை செய்துக்கொண்டனரா அல்லது கொலையா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. எனினும் 5 வயது சிறுவனம் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த விதம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலங்கள் தொடர்பான பிரேதப் பரிசோதனைகள் பலாங்கொடை வைத்தியசாலையில் இன்று நடைபெறவுள்ளது.

பலாங்கொடை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.