கொழும்பு வாழ் மக்களுக்கு மிக முக்கிய அறிவித்தல்!!

Report Print Murali Murali in சமூகம்

எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்பில் 24 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ​அறிவித்துள்ளது.

மின்சார விநியோகம் துண்டிப்பு மற்றும் அத்தியாவசிய திருத்தப் பணிகளுக்காக நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, கோட்டை, கடுவளை, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொட்டிகாவத்தை, முல்லேரியா, இரத்மலானை, சொய்சாபுர ஆகிய பகுதிகளில் இந்த நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் 30ஆம் திகதி காலை 9 மணி முதல் 31ஆம் திகதி காலை 9 மணி வரை 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ​மேலும் கூறியுள்ளது.