டுபாய் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள மதுஷ் உள்ளிட்ட சந்தேகநபர்கள்

Report Print Kamel Kamel in சமூகம்

பிரபல பாதாள உலகக்குழு தலைவர் மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட சந்தேகநபர்கள் இன்றைய தினம் டுபாய் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மதுஷ் உள்ளிட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவது குறித்த இறுதி தீர்மானம் டுபாய் பொலிஸாரால் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையை போன்று சந்தேகநபர்கள் நேரடியாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட மாட்டார்கள்.

மாறாக சந்தேகநபர்கள் பற்றிய விசாரணைகள் அடங்கிய அறிக்கை ஓன்லைன் மூலம் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும்.

குறித்த சந்தேகநபர்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கைகள் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி இந்த சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட்டதுடன், அவர்களை ஒரு மாத காலத்திற்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் அப்போது உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.