சிறுவர் கண்காணிப்பு குழு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

திருகோணமலை, தம்பலகாமத்தில் பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்பு குழு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் இடம்பெற்றுள்ளது.

தம்பலகாமம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று இக்கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது பொலிஸார் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பிலும், அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கங்களை முன்வைத்துள்ளனர்.

இந்த நிகழ்வில் கிராம அதிகாரிகள், பொறுப்பான அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.