திருகோணமலை சிறைச்சாலையில் புதிய வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை சிறைச்சாலையில் கைதிகளுக்கான நலன்புரி வேலைத் திட்டங்கள் சிறைச்சாலை நலன்புரிச் சங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக திருகோணமலை சிறைச்சாலையின் அத்தியட்சகர் ரஜீவ சிறிமால் சில்வா தெரிவித்துள்ளார்.

திருகோணமலை சிறைச்சாலையின் 2019ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொதுக் கூட்டம் நேற்றிரவு நடைபெற்றுள்ளது, இதன் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை கொண்ட மாவட்டமாக திருகோணமலை அமைந்துள்ளது.

கைதிகளுக்கான சுகாதார, சமய மற்றும் இதர தேவைகளையும் சிறைக் கைதிகள் நலன்புரிச்சங்கம் மேற்கொண்டு வருகின்றது.

அதேபோன்று பெண் கைதிகளுக்கான தையல் பயிற்சிநெறி மற்றும் பனையோலை பின்னுதல் வேலைத் திட்டங்களுக்கும் திருகோணமலை சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அத்தோடு சந்தர்ப்ப சூழ்நிலைகளே ஒரு மனிதனை குற்றவாளிகளாக்குகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.