கப்பல்துறையில் கிராமிய வங்கி திறந்து வைப்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை, கப்பல்துறையில் திருகோணமலை பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் மக்கள் நலன் கருதி கிராமிய வங்கி ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மக்களின் பிரச்சினையை தீர்க்கும் முகமாக நவீன வசதிகளுடன் கூடிய கிராமிய வங்கி இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 520 குடும்பங்கள் பயனடைவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் எம்.சீ.எம்.சரீப், கெளரவ விருந்தினராக திருகோணமலை பிரதேச செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ், உதவி கூட்டுறவு ஆணையாளர் கே.வேல்வேந்தன் மற்றும் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்துள்ளனர்.